ஒரே ஸ்ரெஸ்! (உளவழுத்தம்)
பொதுவாக எம் வாழ்கையில் எம்மைச் சூழ காணப்படும் காரியங்கள் யாவும் அதிமாகிவிட்டது என நாம் உணரும் போதும், அவை எமக்கு அளவுக்கு மீறிய சுமையாக இருக்கும் வேளைகளிலும், அதன் விளை வால் வரும் அழுத்தத்தை எம்மால் தாங்கமுடியுமா என ஏக்கமடைகி ன்றோம்.
எங்களுடைய உடல் நலத்திற்கு சவாலாகவோ அல்லது அச்சுறுத்தலா கவோ காணப்படும் எதுவுமே உளவழுத்தம் (ஸ்ரெஸ்) எனப்படும். சில உளவழுத்தங்கள் மனிதர்களை முன்னேறி செல்ல உந்துகின்றது என்றும் அது வாழ்கைக்கு நல்லது என்றும் சிலர் கருதுகின்றார்கள். உளவழுத்தம் இல்லாத வாழ்க்கை பரபரப்பற்றதும் குறிக்கோள் இல்லாததும் என்பது வேறு சிலரின் அபிப்பிராயம். எப்படியாக இருந்தாலும் எங்கள் சரீர சுகநிலையை அல்லது மனநிலையை மறைசூழ்ச்சியால் பாதிக்கும் எந்த காரணியும் வாழ்க்கைக்கு உதவாது.
உளவழுத்தத்தால் பலவிதமான பக்கவிளைவுகள் உண்டாகின்றது:
• குருதி அழுத்தம் கூடுகின்றது,
• சுவாச வட்டம் துரிதமடைகின்றது
• சமிபாட்டுத் தொகுதி மெதுவாகின்றது
• இதய துடிப்பு வீதம் அதிகரிகின்றது
• நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது
• தசைநார்கள் இறுக்கமடைகின்றது
• நித்திரை கொள்ளமுடியாது இருகின்றது
(ஆதாரம் - ஆநனiஉயட நேறள வுழனயல)
உளவழுத்தத்தை உண்டு பண்ணும் காரணிகள்:
• எங்கள் உணர்வுகளை துண்டிவிடும் வெளிக்காட்ட முடியாத் கோபம், துக்கம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை
• உறவு சம்மந்தமான பிரச்சனைகள், ஆதரவு மற்றும் நட்பு குறைந்த வாழ்க்கை
• வாழ்க்கையை மாற்றும் சம்பவங்கள்: உயிர் இழப்பு, வேலை பறிபோகுதல், திருமணம், இடமாற்றம்.
• குடும்பத்தில் பிரச்சனை, சிறுபிள்ளைகளினாலும், வாலிப பருவத்தில் இருக்கும் பிள்ளைகளால் வரும் பிரச்சனை
• உங்கள் கொள்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் குடும்பத்தினால் ஏற்படும் முரண்பாடு
உளவழுத்தத்தை தணிப்பதற்கும், அதனால் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்யவதற்கும் பல மருத்துவ வழி முறைகளும் உண்டு, இன்னும் பல ஸ்தாபனங்களும் இப்படியானவர்களுக்கு ஆதரவாக ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். எவ்வளவு தூரத்திற்கு அவை வெற்றியளிக்கின்றன என்பதை உறுதியாக கூறமுடியுமா?
• வெளிக்காட்டமுடியாத கோபம் எனக்கு பிறப்பில் இருந்தே வருகின்றதே, இதை எப்படி மாற்றிவிடுவது?
• என்னால் மற்றவர்களுடைய அறிவுக்கும் அந்தஸ்திற்கும் ஈடு கொடுக்கமுடியாமல் இருக்கின்றது, இவைகளை நினைத்து எனக்கு இடைவிடாத துக்கம்.
• என் உறவினர் மத்தியில் எனக்கு நல்ல மதிப்பும் இல்லை, நல்ல உறவும் இல்லை. எனக்கு உண்மையான நண்பர்களும் இல்லையே.
• எனக்கு அன்பானவர்கள் இறந்து விட்டது என் தவறா?
• இந்த திருமண சம்மந்தத்திற்குள்; இவ்வளவு பிரச்சனை வரும் என்று யார் அறிவார்கள்?
• இந்த வேலை இவ்வளவு சிக்கலாக நிலைக்கு என்னை தள்ளும் என்று எப்படி எனக்குத் தெரியும்?
• என் பிள்ளைகள் இப்படியாக போவார்கள் என்று நான் நினைக் கவே இல்லையே?
• இந்த நட்புகளினால் எனக்கு பாதிப்பு வரும் என்று முன்கூட்டியே எனக்கு எச்சரிக்க யாரும் இல்லையே.
• இப்படியான ஒரு சிக்கலான குடும்பத்தில் பிறந்தது என் தவறா?
இப்படியாக பல கேள்விகள் எங்களுக்குள் எழுந்து வரலாம். இந்நிலை எங்கு எப்படி தொடங்குகின்றது? இந்த வலைக்குள் சிக்காமல் வாழ்வடையமுடியுமா? அறிந்தோ அறியாமலோ இப்படிபட்ட பிரச்சனைக் குள் சிக்கியிருந்தால் எப்படி வெளியேறலாம்?
இவைகளை முன்கூட்டியே உனக்கு அறிந்து கொள்ள ஒரு வழி உண்டு. பிழையான வழிக்கு உன்னை எடுத்துச் செல்லும் கூட்டுறவுகளை இனம் காண அல்லது வாழ்கையை கெடுக்கும் சம்பந்தங்களை தவிர்த்துக் கொள்ள ஒரே தேவனிடம் வழி உண்டு;. அவர் சத்தத்தை கேட்டு அதன்படி செய்கின்றவன், கன்மலையின் மேல் தன் வீட்டை கட்டியவனுக்கு ஒப்பாவான். எந்தப் புயலும் அந்த இல்லத்தை உடைக்க முடியாது. ஆம்! இயேசு அதை இலவசமாக தர இன்று உன்னை அழைக்கின்றார்.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள:; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28) என்று இயேசு இன்று உன்னை அழைக்கின்றார். அவருக்குள் நீ உளவழுத்தம் இல்லாத நிம்மதியான வாழ்வை கண்டடைய முடியும்.
உலகத்தில் உபத்திரங்கள் உண்டு ஆனால் அவை யாவையும் ஜெயங்கொண்ட இயேசு இவைகளை மேற்கொள்ள எங்களுக்கும் வழி வைத்துள்ளார். எம் நிலை எப்படியாக இருந்தாலும் என்ன, எல்லாம் எம் கையில் தான் இருக்கின்றது. இயேசு இலவசமாக நிம்மதி தர காத்திருக்கிறார், நீ உன்னை ஒப்புக் கொடுக்க ஆயத்தமா?
உளவழுத்தம் இல்லாத வாழ்கையை குறித்து வேதாகமத்திலே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முற்றிலும் சமாதானமான வாழ்வு தேவனிடம் உண்டு.
“கர்த்தருக்கு பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல இருப்பார்கள். இதோ, கர்த்தருக்கு பயப்படுகின்ற மனு~ன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கபடுவான்” சங்கீதம் (128:1-4)
இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற உனக்கு சமாதானம் தேவையா? அது உன் கையில் தான் இருகின்றது. மத வைராக்கியங்கள், குடும்ப அந்தஸ்துக்கள், சமுதாய நற்பெயர், கல்வி அறிவு, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணங்களும் உன்னை தடைசெய்யலாம். உனக்கு சமாதானம் தேவையா? முடிவெடுக்க வேண்டியது நீ தான்! இப்படியான சந்தர்ப்பம் இனி உனக்கு வராமல் போகலாம். இன்று உன் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்புக்கொடு.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.