Monday, February 29, 2016

INNER MAN BOOK ARTICLES - திரும்பிவராத சந்தர்ப்பம்!

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு மிகுந்த ஆஸ்தியுள்ள ஒரு வாலிபன் வசித்து வந்தான். தேவ கற்பனைகளில் பிரமாணிக்கமுள்ள அந்த வாலிபன் ஒரு நாள் இயேசுவை சந்திக்க வந்தான். அவன் இயேசுவை கண்டவுடன் முழங்கால் படியிட்டு;
 
வாலிபன்;: நல்ல போதகரே, முடிவில்லா வாழ்வை அடைய நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?

இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே: நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளை கைகொள் என்றான்.

வாலிபன்: எவைகள் என்று கேட்டான்.

இயேசு:
கொலை செய்யாதிருப்பாயாக, 
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, 
களவு செய்யாதிருப்பாயாக, 
பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக 
உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக
உன்னிடத்தில் அன்பு கூறுகிறது போலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக, என்றார்.

வாலிபன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டி ருக்கிறேன்; இன்னும் என்னிடத்pல் குறைவு என்ன என்றான்.

இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று. தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கி~ம் உண்டாயிருக்கும்: பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார்.

அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்த படியால், இந்த வார்த்தையை கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய் போய்விட்டான்.

என்னிடம் என்ன குறையுண்டு என்று கேட்ட வாலிபனுக்கு இயேசு அவனுடைய குறையை எடுத்துச் சொன்னார். ஐசுவரியம் அல்ல ஐஸ்வரியத்தின் ஆசை அவனுள்ளே இருந்தது. பண மயக்கம் அவனை இயேசு சொன்னதை கேட்டவுடனே துக்கமடையச் செய்தது. 

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரிடம் இருந்து ஒரு அழைப்பு “என்னை பின் பற்றி வா” அதற்கு அவன் இதயக் கதவு அடைக்கப்பட்டது. எப்படியான பாரிய இழப்பு!

உலகத்தில் நாங்கள் வாழும் நாட்களில் எங்களுக்கு பல தேவைகள் உண்டு, அவைகள் யாவும் சந்திக்கப்பட வேண்டியவைகளே, ஆனால் அவைகளை குறித்த பற்று எம் உள்ளத்தில் ஏற்பட்டால் அது எங்கள் மனக்கண்களை குறுடாக்கிவிடும். ஜசுவரியத்தின் மயக்கம் பல பயங் கரமான இடத்திற்கு எங்களை தள்ளிவிடும். 

முடிவில்லா வாழ்க்கையை பெற விரும்பிய வாலிபனின் நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள். அவனிடம் பெருகின செல்வம் இருந்தும் கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி என்பவை சிறுவயதுமுதல் இருந்ததில்லை. தன் பெற்றோரை கனம் பண்ணிவந்தான், பிறரை அன்பு செய்து வந்தான் என கூறினான், ஆனாலும் செல்வத்தின் பற்று அவனை மேற்கொண்டு விட்டது. அவனுக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்பத்தை இழந்து விட்டான். அந்தச் சந்தர்ப்பம் மறுபடியும் வரமாட்டாது.

இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற உன்னுடைய வாழ்கையிலும் இன்று உலகத்துக்குரிய ஆசைகள், பற்றுக்கள் உன் மனக்கண்ணை குறுடுபடுத்தியிருக்கலாம், அது:
பண ஆசையாக இருக்கலாம், 
மதுபான பிரியமாக இருக்கலாம், 
மோக பாவமாக இருக்கலாம், 

இன்று ஒரு அரிய சந்தர்ப்பம்! இந்த சந்தர்ப்பம் மறுபடியும் உனக்கு வராமல் போகலாம். இன்று உன் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்புக் கொடு, அவரை பின்பற்றி நடக்க இயேசு இன்று உன்னை அழை க்கின்றார். 

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடு க்கப்படும்” (மத்தேயு 6:33)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.