Thursday, January 28, 2016

கொஞ்சம் இருந்தால் என்ன?

கொஞ்சம் இருந்தால் என்ன?

கான்சர் (Cancer) என்னும் சொல்லை கேட்டவுடன், பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் போல இருகின்றதல்லவா?

மனித உடலானது பதினாயிரம் கோடிக்கணக்கான கலங்களை (Cells) கொண்டது. சாதாரணமாக, மனித கலங்கள் விருத்தியடைந்து, பிரிந்து உடலுக்கு தேவையான புதிய கலங்களை அமைக்கும். கலங்கள் பழமையடையும் போது அல்லது பாதிக்கப்படும்போது, அவை இறந்து, புதிய கலங்கள் அவ்விடத்தை நிரப்பும்.

புற்றுநோய் விருத்தியடையும்போது, இந்த ஒழுங்கு முறைக்கு எதிராக கலங்கள் செயற்படும். கலங்கள் அதிகதிகமாக வழமைக்கு மாறாக மாற்றமடைந்து, பழமையான அல்லது பாதிக்கப்;பட்ட கலங்கள் இறந்து போகாமலும், புதிய கலங்கள் தேவைப்படாத இடத்தில் புதிய கலங்கள் உற்பத்தியாகும் போது - இந்த மேலதிகமான கலங்கள் ஒழுங்கமை ப்பை மீறி தொடர்ந்து வளர்ந்து புற்று நோய் கட்டிகளை (Tumor) உரு வாக்கின்றது. (ஆதாரம் National Cancer Institue)

காலப்போக்கில் இவைகளை நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலமா கவும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகின்றது. இப்படியாக கட்டு மீறிய பல காரியங்கள் எங்கள் வாழ்க்கையிலும் உண்டு.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் வாக்களித்த செழுமை நிறைந்த தேசத்தைக் கொடுக்கும் போது, எதிரிகளை முற்றாக நீக்கிவிடும்படி யாக கட்டளையிட்டார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, தேவனுடைய கட்டளையை மீறி, அவர்களில் சிலரை தங்கள் வேலை களை பார்ப்பதற்காக அவர்களை விட்டு வைத்தார்கள். இதனால் அந்த விட்டு வைத்த எதிரிகள் காலப்போக்கில் பலமடைந்து கட்டுப்பாடின்றி இவர்களுக்கு கண்ணியாக மாறிப்போனார்கள்.

இப்படியாக நாங்களும் இயேசுக் கிறிஸ்துவை எங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பி, ஞானஸ்நானத்தை பெற்று மறுபடி பிறந்த வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது, எங்கள் பழைய சுபாவங் களை களைந்து “முற்றிலும் களைந்து” கிறிஸ்துவிற்குள் புது சிருஷ் டியாக வாழ வேண்டும். ஆனாலும், ஆங்காங்கே பழைய மனிதனுக்கு ரிய சில சுபாவங்களை பலர் விட்டு வைக்கின்றார்கள். ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருந்துவிட்டு போனால் என்ன? என்று பாராமுகமாக இருந்து விடுகின்றோம். அவை ஆரம்பத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருப்ப தைப்போன்றுதான் தென்படும், ஆனால் குறித்த நேரம் வரும்போது, அந்த சுபாவம் கட்டுமீறி வெளிப்பட்டு விபரீதங்களை கொண்டுவந்து விடும்.

உதாரணமாக சிலர் தாகாத வார்த்தைகளை பேசும் பழக்கத்தை முற்றாக விட்டு விடுவதில்லை. ஆனால் சந்தர்ப்பத்திற்கேற்ற பிரகாரம், ஆலயங்களில் நல்ல வார்த்தைகளையும், நண்பர்கள் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் இடைக்கிடையே சுற்றுவட்டாரங்களில் உள்ளவர் களைப்போல் ஊரோடு ஒத்தோடு என்று தகாத வார்த்தைகளை பேசிக் கொள்வார்கள். நாளடைவில் இந்த தகாத பழக்கம் புற்றுநோயைப் போல உள்ளே வளர ஆரம்பித்து, ஆலயத்தில் ஏற்படும் சில கருத்து வேறுபாடுகளுக்கு முகங்கொடுக்கும் போது, அந்த தகாத வார்த்தைகள் கட்டுமீறி இடந்தெரியாமல் வெளியே வந்து விடும். எந்த ஒரு பாவ பழக்கமும் இப்படியாகத்தான் தலை தூக்குகின்றது.

சமைக்காத மாமிச துணிக்கை வீட்டில் ஒரு இடத்தில் விழுந்திருக்கு மானால் அது புழுப்பிடிப்பதற்கு ஒருவரும் ஏதும் செய்யவேண்டிய தில்லை. அது போல துன்மார்க்கத்திற்கேதுவான பாவ பழக்கங்களை எங்களுக்குள்ளோ அல்லது வீட்டிலோ வைத்திருந்தால், பிசாசு உள்ளே வர நாங்கள் விசேஷித்த அழைப்பிதழ் கொடுக்கவேண்டியதில்லை. தனக்குச் சொந்தமான காரியங்கள் இருக்கும் இடத்தில் பிசாசிற்கு பங்குண்டு. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக் குமென்று அறியீர்களா? (1 கொரி 5:6)  நாங்கள் விட்டுவைத்திருக்கும் சிறிய தீய பழக்கங்கள் காலப்போக்கில் எங்கள் வாழ்க்கையை முற்றிலும் கெடுத்துவிடும்.

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுக்கிறிஸ்துவை அறிகிற அறிவி னாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னி லைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். (2 பேதுரு 2:20)

நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது எனறு சொல்லப்பட்ட மெய்யான பழமொழி யின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது. (2 பேதுரு 2:22)

எங்கள் வாழ்க்கையை கெடுக்கும் பொய், பெருமை, விபசாரம், வேசித் தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள் களியாட்டுக்கள் முதலானவைகளில் கொஞ்சம் வைத்திருக் கலாம் என சொல்லலாமா? கூடாதே! இவைகள் யாவும் புற்றுநோயை ப்போல பரவி வாழ்க்கையிலே வேண்டப்படாத வேதனைகளை, ஏன் மரணத்தை கூட உண்டு பண்ணும். ஆனால் இவைகளை எங்கள் சொந்த பலத்தால் ஜெயம் கொள்ள முடியாது. நாங்கள் எங்கள் வாழ்க்கையிலே இவைகளை விட்டுவிட உண்மையான தீர்மானம் செய்யும் போது பரிசுத்த ஆவியானவர் எங்களை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு வழிநடத்துவார்.

வேதம் சொல்கின்றது ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள் அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். பரிசுத்த வாழ்க்கையின் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொ றுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் எங்க ளில் உருவாக வேண்டும். இது ஒரு கணப்பொழுதில் உருவாகப் போவதில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். அதாவது எங்களுக்கு நேரிடும் அநீதியான சூழ்நிலைகளிலும் ஆவிக்குரிய கனியின் சுபாவம் வெளிப்பட வேண்டும். நாங்கள் ஆவியினால் பிழைத்திருந்தால் ஆவிகேற்றபடி நடக்கவும் கடவோம்.

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குளிருந்தால் புதுசிருஷ்டியாயிரு க்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின. பழைய வாழ்க்கைக்குரிய சுபாவங்களை கொஞ்சமும் வைத்திருக்காமல், அவைகளை உண்டாக்கும் சூழ்நிலைகளை முற்றிலும் தவிர்த்து, எங்கள் பரிசுத்த வாழ்க்கையை பாழாக்கும் செய்கைகளை முற்றிலும் எங்களை விட்டு அகற்றிவிடுவோம்.உள்ளான மனிதன் சஞ்சிகை 
THE INNER MAN BOOK
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


Wednesday, January 27, 2016

ஜெபம் செய்வோம்! Lets Pray!

ஜெபம் செய்வோம் 

பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் அன்பான பிதாவே, 

நீர் சர்வ வல்லமையுள்ள தேவன்! உம்முடைய குமாரனாகிய இயேசுக் கிறிஸ் துவை எங்களுக்காக தந்தருளினதிற்காக உமக்கு நன்றி! இயேசுக்கிறிஸ்துவு க்கூடாக நீர் அனுப்பின தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவருக்காக உமக்கு நன்றி!

கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து இப்பூமியில் மனிதனாக வந்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, என்னை மீட்பதற்காக பாடுகள் பட்டு தம்முடைய பரிசுத்தமான இரத்தத்தை சிந்தி, சிலுவையிலே எனக்காக மரித்து, பாவத்தை வென்று உயிர்ந்தெழுந்தார் என முற்றிலும் விசுவாசிக்கின்றேன். இன்று நான் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவை என் வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கின்றேன்! இதுவரைகாலமும் நீர் என்னை நடத்தி வந்த உம்முடைய மிகுந்த இரக்கங்களுக்காக உமக்கு ஸ்தோத்திரம்! 

மற்றவர்களை குறித்திருக்கின்ற கசப்பை என் மனத்தில் இருந்து அகற்றிவிட இன்று நான் தீர்மானிக்கின்றேன்! பிறர் எனக்கு செய்த குற்றங்களை மன்னித்துவிட இன்று நான் தீர்மானம் எடுக்கின்றேன். பரிசுத்த ஆவியானவரே எனக்குத் துணைசெய்யும்!

என்னுடைய பாவ பழக்கங்களை விட்டுவிட இன்று நான் தீர்மானிக்கின்றேன். நான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்தருளும்! இன்னும் நான் உணராமல் செய்துவரும் தீய பழக்கங்கள் என்னில் இருக்குமாயின் அவைகளை எனக்கு வெளிப்படுத்தும். பரிசுத்த ஆவியானவரே இவை யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று மனம் பரிசுத்தம் அடைய எனக்கு உதவி செய்யும்!

தேவனே, மோட்ச வாழ்க்கைக்கு அவசியமானதை என் வாழ்க்கையிவே முதலாவதாக நான் தேட என்னை வழி நடத்தும். இன்று நான் என்னுடைய தேவைகளை உம்முடைய பாதத்தில் வைக்கின்றேன், என் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து என்னை பூரணமாக விடுவித்து தேவ சமாதானம் என் உள்ளத்தை ஆழ கிருபை செய்தருளும். 

கர்த்தாவே நீர் என்னுடைய ஜெபத்தைக் கேட்டு அதற்கு பதில் தருகின்ற ஜீவனுள்ள தேவன் என்று நான் முற்றிலும் விசுவாசிக்கின்றேன்! உம்மை உண்மையாய் தேடுகிற யாவருக்கும் சமீபமாகவுள்ள கர்த்தர் நீர்! பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்வது உமக்கு லேசான காரியம்! 
எனக்காக மரித்து உயிர்த்த கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் கேட்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்!


உள்ளான மனிதன் சஞ்சிகை 
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


Monday, January 25, 2016

Who is Noble Class? உயர்குலம் யார்?

உயர் குலம் யார்?இன்று உலகிலே பொதுவாக நாடுகளுக்கிடைய வேறுபாடுகளைக் காணலாம். ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் மற்ற இனத்தை ஒட்டு மொத்தமாக இழிவு படுத்தி பேசுவதை கேட்டிருக்கின்றோம். ஒரே இனங்களுக்குள் பலவிதமான வகு ப்புகள், பிரிவுகள், தராதரங்களை உருவாக்கியுள்ளார்கள். சிலர் தங் கள் கருத்தை நியாயப் படுத்த பல விளக்கங்களைக் கூறிக்கொள்வா ர்கள்;. ஒரே வகுப்புகளுக்கிடைய கோத்திரங்களை பற்றி பேசுவார்கள். ஒரு கோத்திரத்திலேயே குடும்பங்கள் சொந்தங்களுக்கிடையே அந்தஸ் த்துக்களை வகுத்து அவர்களைப்பார்கிலும் நாங்கள் மேலானவர்கள் என பேசிக் கொள்வார்கள். ஒரே குடும்பத்திலே சகோதரர் மத்தியிலே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை காணமுடியும். ஏன் கணவன் மனை விக்கு இடையிலும், உன்னுடையவர்கள், என்னுடைய வர்கள் என வேறுபிரித்து கொள்வார்கள்.  இந்த பட்டியலுக்கு முடிவு கிடையாது.

தொழில் செய்யும் இடங்களிலும், பாடசாலைகளிலும், ஏன் ஆலயங் களில் கூட இப்படியான பாரபட்சமான சூழ்நிலையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஒரு பாடசாலை ஆசிரியருடன், மாணவர்கள் மத்தியில் சிறுபான்மையினரைக் கேலி செய்து சிறுமைப்படுத்துவதை எதிர்க்கும் நாளை (Anti Bullying Day) பற்றி பேசின போது, “ஆசிரியர் மத்தியிலேயே இப்படியாக செய்கைகளை காணமுடிகின்றது என்றும்  சிறுவர்களுக்கு இதை கற்றுக் கொடுக்கு முன், வயதுக்கு வந்தவர்கள் இதை தங்கள் வாழ்க்கையில் பயிற்ச்சி செய்ய வேண்டும்” என அவர் தன் கருத்தை கூறினார். இன, வகுப்பு, அந்தஸ்து, உடல்நிலை அடிப்ப டையில் பாரபட்சம் காட்டும் சம்பவங்களைக் குறித்த விழிப்புணர்வை கொடுப்பது நல்லது, அவைகளால் ஒரு பலனும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் எவ்வளவு விழிப்புணர்வைக் கொண்டு வந்தாலும் தனக்கென்று ஒரு சம்பவம் வரும் போது “உனக்கில்லை உபதேசம் ஊருக்கு” என்ற பிரகாரமாய் போய்விடுகின்றது.

இப்படியாக நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், ஊருக்கு ஊர், சமுதாயத்திற்கு சமுதாயம், சொந்தத்திற்கு சொந்தம், குடும்பத்திற்கு குடும்பம், மனிதனுக்கு மனிதன் இடையே ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கின்றது.

இதனால் ஒரு சாரார் பெருமையடைகிறார்கள், பலர் இதனால் சமுதாயத்திலிருந்து ஒடுக்கப்பட்டு மனநோவடைகின்றார்கள். 

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்: ஒருவன் பரிசேயன் மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயர்; எனப்பட்ட யூத மதப்பிரிவினர் வேத பிரமாணங்களை நன்றாக அறிந்தவர்களும், கற்றவர்களும், அத்துடன் தாங்கள் வேதபிரமாணங் களை கண்டிப்பாக கடைப்பிடிப்பவர்கள் என்று தங்களைத் தாங்கள் மேன்மை பாராட்டி வந்தவர்கள், ஆனாலும் இவர்களில் பலர் உண்மை யிலே சுயநீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

ஆயக்காரர் உரோமருடைய ஆட்சிக் காலத்தில் உரோமருக்கு வரி சேகரித்ததால் இஸ்ரவேலர் மத்தியில் துரோகிகளாகவும் பாவிகளாகவும் கருதப்பட்டார்கள்.

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனு~ரைப் போலவும் இந்த ஆயக்கார னைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்: என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று தனக்குள்ளே ஜெபம் பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று: தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

பரிசேயன் அல்ல ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்கிறேன்: ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்று இயேசு கூறினார். (லூக்கா 18:10-14)

மனிதன் எப்படியாக ஏற்றத்தாழ்வுகளை அமைத்துக் கொண்டாலும், அவை இந்த உலகத்துடன் முடிவு பெறும். தேவ சந்நிதியில் மனித பாகுபாட்டு முறைகள் ஒரு பலனையும் கொடுக்க மாட்டாது. “மனிதனோ முகத்தைப் பார்க்கின்றான் ஆனால் தேவனோ இருதயத்தை பார்க்கின்றார்” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. 

தேவன் தாமே எங்களை “முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சைச்செடியாக நாட்டினேன்;” என்றும் “நீ எனக்குக் காட்டுத் திராட்சைச் செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனதென்ன” எனவும் கூறியிருக்கின்றார். 

தேவன் கூறும் இந்த உயர்குலமான மனிதர்கள் யார்? அவர்களின் சுபாவம் எப்படி இருக்கும்? இந்த மனிதர்கள் இயேசுக் கிறிஸ்துவினால் மீட்கப்பட்டவர்கள். இந்த உயர்குல மனிதர்களிலே அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்னும் கனியை காணமுடியும். இங்கு உலக பிரமாணங்களின்படியான ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. 

ஆகாத கொடிகளாய் மாறிப்போனதென்ன என்று கூறும் மனிதர் மத்தியில் எப்படிப்பட்ட சுபாவங்கள் இருக்கும்? விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினை கள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள் களியா ட்டுக்கள் முதலானவைகள் அவர்களுள் இருக்கும். இவர்கள் உலகத்தி ற்கும் அதன் போக்கிற்கும் அடிமைப்பட்டவர்கள்.

உலக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துவிட முயற்ச்சி செய்வதிலும், எங்கள் வாழ்வில் தேவன் எதிர்பார்க்கும் உயர்குலமாக நாங்கள் நல்ல கனியை கொடுக்கும்படியாக வாழ வேண்டும். 

“நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனியைக் கொடுப்பான்: என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்: அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்: அவைகள் எரிந்துபோம்”. என்று இயேசு சொன்னார். 

கர்த்தராகிய இயேசுவிலே நிலைத்திருங்கள்! உயர்குல கனியை கொடுங்கள்!


உள்ளான  மனிதன் சஞ்சிகை
THE INNER MAN MAGAZINE
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


THE INNER MAN - TAMIL MAGAZINE