Monday, January 25, 2016

Who is Noble Class? உயர்குலம் யார்?

உயர் குலம் யார்?



இன்று உலகிலே பொதுவாக நாடுகளுக்கிடைய வேறுபாடுகளைக் காணலாம். ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் மற்ற இனத்தை ஒட்டு மொத்தமாக இழிவு படுத்தி பேசுவதை கேட்டிருக்கின்றோம். ஒரே இனங்களுக்குள் பலவிதமான வகு ப்புகள், பிரிவுகள், தராதரங்களை உருவாக்கியுள்ளார்கள். சிலர் தங் கள் கருத்தை நியாயப் படுத்த பல விளக்கங்களைக் கூறிக்கொள்வா ர்கள்;. ஒரே வகுப்புகளுக்கிடைய கோத்திரங்களை பற்றி பேசுவார்கள். ஒரு கோத்திரத்திலேயே குடும்பங்கள் சொந்தங்களுக்கிடையே அந்தஸ் த்துக்களை வகுத்து அவர்களைப்பார்கிலும் நாங்கள் மேலானவர்கள் என பேசிக் கொள்வார்கள். ஒரே குடும்பத்திலே சகோதரர் மத்தியிலே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை காணமுடியும். ஏன் கணவன் மனை விக்கு இடையிலும், உன்னுடையவர்கள், என்னுடைய வர்கள் என வேறுபிரித்து கொள்வார்கள்.  இந்த பட்டியலுக்கு முடிவு கிடையாது.

தொழில் செய்யும் இடங்களிலும், பாடசாலைகளிலும், ஏன் ஆலயங் களில் கூட இப்படியான பாரபட்சமான சூழ்நிலையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஒரு பாடசாலை ஆசிரியருடன், மாணவர்கள் மத்தியில் சிறுபான்மையினரைக் கேலி செய்து சிறுமைப்படுத்துவதை எதிர்க்கும் நாளை (Anti Bullying Day) பற்றி பேசின போது, “ஆசிரியர் மத்தியிலேயே இப்படியாக செய்கைகளை காணமுடிகின்றது என்றும்  சிறுவர்களுக்கு இதை கற்றுக் கொடுக்கு முன், வயதுக்கு வந்தவர்கள் இதை தங்கள் வாழ்க்கையில் பயிற்ச்சி செய்ய வேண்டும்” என அவர் தன் கருத்தை கூறினார். இன, வகுப்பு, அந்தஸ்து, உடல்நிலை அடிப்ப டையில் பாரபட்சம் காட்டும் சம்பவங்களைக் குறித்த விழிப்புணர்வை கொடுப்பது நல்லது, அவைகளால் ஒரு பலனும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் எவ்வளவு விழிப்புணர்வைக் கொண்டு வந்தாலும் தனக்கென்று ஒரு சம்பவம் வரும் போது “உனக்கில்லை உபதேசம் ஊருக்கு” என்ற பிரகாரமாய் போய்விடுகின்றது.

இப்படியாக நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், ஊருக்கு ஊர், சமுதாயத்திற்கு சமுதாயம், சொந்தத்திற்கு சொந்தம், குடும்பத்திற்கு குடும்பம், மனிதனுக்கு மனிதன் இடையே ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கின்றது.

இதனால் ஒரு சாரார் பெருமையடைகிறார்கள், பலர் இதனால் சமுதாயத்திலிருந்து ஒடுக்கப்பட்டு மனநோவடைகின்றார்கள். 

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்: ஒருவன் பரிசேயன் மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயர்; எனப்பட்ட யூத மதப்பிரிவினர் வேத பிரமாணங்களை நன்றாக அறிந்தவர்களும், கற்றவர்களும், அத்துடன் தாங்கள் வேதபிரமாணங் களை கண்டிப்பாக கடைப்பிடிப்பவர்கள் என்று தங்களைத் தாங்கள் மேன்மை பாராட்டி வந்தவர்கள், ஆனாலும் இவர்களில் பலர் உண்மை யிலே சுயநீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

ஆயக்காரர் உரோமருடைய ஆட்சிக் காலத்தில் உரோமருக்கு வரி சேகரித்ததால் இஸ்ரவேலர் மத்தியில் துரோகிகளாகவும் பாவிகளாகவும் கருதப்பட்டார்கள்.

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனு~ரைப் போலவும் இந்த ஆயக்கார னைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்: என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று தனக்குள்ளே ஜெபம் பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று: தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

பரிசேயன் அல்ல ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்கிறேன்: ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்று இயேசு கூறினார். (லூக்கா 18:10-14)

மனிதன் எப்படியாக ஏற்றத்தாழ்வுகளை அமைத்துக் கொண்டாலும், அவை இந்த உலகத்துடன் முடிவு பெறும். தேவ சந்நிதியில் மனித பாகுபாட்டு முறைகள் ஒரு பலனையும் கொடுக்க மாட்டாது. “மனிதனோ முகத்தைப் பார்க்கின்றான் ஆனால் தேவனோ இருதயத்தை பார்க்கின்றார்” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. 

தேவன் தாமே எங்களை “முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சைச்செடியாக நாட்டினேன்;” என்றும் “நீ எனக்குக் காட்டுத் திராட்சைச் செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனதென்ன” எனவும் கூறியிருக்கின்றார். 

தேவன் கூறும் இந்த உயர்குலமான மனிதர்கள் யார்? அவர்களின் சுபாவம் எப்படி இருக்கும்? இந்த மனிதர்கள் இயேசுக் கிறிஸ்துவினால் மீட்கப்பட்டவர்கள். இந்த உயர்குல மனிதர்களிலே அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்னும் கனியை காணமுடியும். இங்கு உலக பிரமாணங்களின்படியான ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. 

ஆகாத கொடிகளாய் மாறிப்போனதென்ன என்று கூறும் மனிதர் மத்தியில் எப்படிப்பட்ட சுபாவங்கள் இருக்கும்? விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினை கள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள் களியா ட்டுக்கள் முதலானவைகள் அவர்களுள் இருக்கும். இவர்கள் உலகத்தி ற்கும் அதன் போக்கிற்கும் அடிமைப்பட்டவர்கள்.

உலக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துவிட முயற்ச்சி செய்வதிலும், எங்கள் வாழ்வில் தேவன் எதிர்பார்க்கும் உயர்குலமாக நாங்கள் நல்ல கனியை கொடுக்கும்படியாக வாழ வேண்டும். 

“நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனியைக் கொடுப்பான்: என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்: அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்: அவைகள் எரிந்துபோம்”. என்று இயேசு சொன்னார். 

கர்த்தராகிய இயேசுவிலே நிலைத்திருங்கள்! உயர்குல கனியை கொடுங்கள்!


உள்ளான  மனிதன் சஞ்சிகை
THE INNER MAN MAGAZINE
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH


THE INNER MAN - TAMIL MAGAZINE




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.