Monday, February 29, 2016

INNER MAN BOOK ARTICLES - திரும்பிவராத சந்தர்ப்பம்!

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு மிகுந்த ஆஸ்தியுள்ள ஒரு வாலிபன் வசித்து வந்தான். தேவ கற்பனைகளில் பிரமாணிக்கமுள்ள அந்த வாலிபன் ஒரு நாள் இயேசுவை சந்திக்க வந்தான். அவன் இயேசுவை கண்டவுடன் முழங்கால் படியிட்டு;
 
வாலிபன்;: நல்ல போதகரே, முடிவில்லா வாழ்வை அடைய நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?

இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே: நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளை கைகொள் என்றான்.

வாலிபன்: எவைகள் என்று கேட்டான்.

இயேசு:
கொலை செய்யாதிருப்பாயாக, 
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, 
களவு செய்யாதிருப்பாயாக, 
பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக 
உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக
உன்னிடத்தில் அன்பு கூறுகிறது போலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக, என்றார்.

வாலிபன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டி ருக்கிறேன்; இன்னும் என்னிடத்pல் குறைவு என்ன என்றான்.

இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று. தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கி~ம் உண்டாயிருக்கும்: பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார்.

அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்த படியால், இந்த வார்த்தையை கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய் போய்விட்டான்.

என்னிடம் என்ன குறையுண்டு என்று கேட்ட வாலிபனுக்கு இயேசு அவனுடைய குறையை எடுத்துச் சொன்னார். ஐசுவரியம் அல்ல ஐஸ்வரியத்தின் ஆசை அவனுள்ளே இருந்தது. பண மயக்கம் அவனை இயேசு சொன்னதை கேட்டவுடனே துக்கமடையச் செய்தது. 

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரிடம் இருந்து ஒரு அழைப்பு “என்னை பின் பற்றி வா” அதற்கு அவன் இதயக் கதவு அடைக்கப்பட்டது. எப்படியான பாரிய இழப்பு!

உலகத்தில் நாங்கள் வாழும் நாட்களில் எங்களுக்கு பல தேவைகள் உண்டு, அவைகள் யாவும் சந்திக்கப்பட வேண்டியவைகளே, ஆனால் அவைகளை குறித்த பற்று எம் உள்ளத்தில் ஏற்பட்டால் அது எங்கள் மனக்கண்களை குறுடாக்கிவிடும். ஜசுவரியத்தின் மயக்கம் பல பயங் கரமான இடத்திற்கு எங்களை தள்ளிவிடும். 

முடிவில்லா வாழ்க்கையை பெற விரும்பிய வாலிபனின் நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள். அவனிடம் பெருகின செல்வம் இருந்தும் கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி என்பவை சிறுவயதுமுதல் இருந்ததில்லை. தன் பெற்றோரை கனம் பண்ணிவந்தான், பிறரை அன்பு செய்து வந்தான் என கூறினான், ஆனாலும் செல்வத்தின் பற்று அவனை மேற்கொண்டு விட்டது. அவனுக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்பத்தை இழந்து விட்டான். அந்தச் சந்தர்ப்பம் மறுபடியும் வரமாட்டாது.

இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற உன்னுடைய வாழ்கையிலும் இன்று உலகத்துக்குரிய ஆசைகள், பற்றுக்கள் உன் மனக்கண்ணை குறுடுபடுத்தியிருக்கலாம், அது:
பண ஆசையாக இருக்கலாம், 
மதுபான பிரியமாக இருக்கலாம், 
மோக பாவமாக இருக்கலாம், 

இன்று ஒரு அரிய சந்தர்ப்பம்! இந்த சந்தர்ப்பம் மறுபடியும் உனக்கு வராமல் போகலாம். இன்று உன் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்புக் கொடு, அவரை பின்பற்றி நடக்க இயேசு இன்று உன்னை அழை க்கின்றார். 

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடு க்கப்படும்” (மத்தேயு 6:33)


Saturday, February 13, 2016

INNERMAN BOOK

To Read THE INNERMAN BOOK follow the link belowTamil Bible Material Stress Relief - ஒரே ஸ்ரெஸ்! (உளவழுத்தம்)

ஒரே ஸ்ரெஸ்! (உளவழுத்தம்)

பொதுவாக எம் வாழ்கையில் எம்மைச் சூழ காணப்படும் காரியங்கள் யாவும் அதிமாகிவிட்டது என நாம் உணரும் போதும், அவை எமக்கு அளவுக்கு மீறிய சுமையாக இருக்கும் வேளைகளிலும், அதன் விளை வால் வரும் அழுத்தத்தை எம்மால் தாங்கமுடியுமா என ஏக்கமடைகி ன்றோம்.

எங்களுடைய உடல் நலத்திற்கு சவாலாகவோ அல்லது அச்சுறுத்தலா கவோ காணப்படும் எதுவுமே உளவழுத்தம் (ஸ்ரெஸ்) எனப்படும். சில உளவழுத்தங்கள் மனிதர்களை முன்னேறி செல்ல உந்துகின்றது என்றும் அது வாழ்கைக்கு நல்லது என்றும் சிலர் கருதுகின்றார்கள். உளவழுத்தம் இல்லாத வாழ்க்கை பரபரப்பற்றதும் குறிக்கோள் இல்லாததும் என்பது வேறு சிலரின் அபிப்பிராயம். எப்படியாக இருந்தாலும் எங்கள் சரீர சுகநிலையை அல்லது  மனநிலையை மறைசூழ்ச்சியால் பாதிக்கும் எந்த  காரணியும் வாழ்க்கைக்கு உதவாது. 

உளவழுத்தத்தால் பலவிதமான பக்கவிளைவுகள் உண்டாகின்றது:

குருதி அழுத்தம் கூடுகின்றது, 
சுவாச வட்டம் துரிதமடைகின்றது
சமிபாட்டுத் தொகுதி மெதுவாகின்றது
இதய துடிப்பு வீதம் அதிகரிகின்றது
நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது
தசைநார்கள் இறுக்கமடைகின்றது
நித்திரை கொள்ளமுடியாது இருகின்றது
(ஆதாரம் - ஆநனiஉயட நேறள வுழனயல)

உளவழுத்தத்தை உண்டு பண்ணும் காரணிகள்:

எங்கள் உணர்வுகளை துண்டிவிடும் வெளிக்காட்ட முடியாத் கோபம், துக்கம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை
உறவு சம்மந்தமான பிரச்சனைகள், ஆதரவு மற்றும் நட்பு குறைந்த வாழ்க்கை
வாழ்க்கையை மாற்றும் சம்பவங்கள்: உயிர் இழப்பு, வேலை பறிபோகுதல், திருமணம், இடமாற்றம்.
குடும்பத்தில் பிரச்சனை, சிறுபிள்ளைகளினாலும், வாலிப பருவத்தில் இருக்கும் பிள்ளைகளால் வரும் பிரச்சனை
உங்கள் கொள்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் குடும்பத்தினால் ஏற்படும் முரண்பாடு
உளவழுத்தத்தை தணிப்பதற்கும், அதனால் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்யவதற்கும் பல மருத்துவ வழி முறைகளும்  உண்டு, இன்னும் பல ஸ்தாபனங்களும் இப்படியானவர்களுக்கு ஆதரவாக ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். எவ்வளவு தூரத்திற்கு அவை வெற்றியளிக்கின்றன என்பதை உறுதியாக கூறமுடியுமா?

வெளிக்காட்டமுடியாத கோபம் எனக்கு பிறப்பில் இருந்தே வருகின்றதே, இதை எப்படி மாற்றிவிடுவது? 
என்னால் மற்றவர்களுடைய அறிவுக்கும் அந்தஸ்திற்கும் ஈடு கொடுக்கமுடியாமல் இருக்கின்றது, இவைகளை நினைத்து எனக்கு இடைவிடாத துக்கம். 
என் உறவினர் மத்தியில் எனக்கு நல்ல மதிப்பும் இல்லை, நல்ல உறவும் இல்லை. எனக்கு உண்மையான நண்பர்களும் இல்லையே. 
எனக்கு அன்பானவர்கள் இறந்து விட்டது என் தவறா? 
இந்த திருமண சம்மந்தத்திற்குள்; இவ்வளவு பிரச்சனை வரும் என்று யார் அறிவார்கள்? 
இந்த வேலை இவ்வளவு சிக்கலாக நிலைக்கு என்னை தள்ளும் என்று  எப்படி எனக்குத் தெரியும்? 
என் பிள்ளைகள் இப்படியாக போவார்கள் என்று நான் நினைக் கவே இல்லையே? 
இந்த நட்புகளினால் எனக்கு பாதிப்பு வரும் என்று முன்கூட்டியே எனக்கு எச்சரிக்க யாரும் இல்லையே. 
இப்படியான ஒரு சிக்கலான குடும்பத்தில் பிறந்தது என் தவறா? 

இப்படியாக பல கேள்விகள் எங்களுக்குள் எழுந்து வரலாம். இந்நிலை எங்கு எப்படி தொடங்குகின்றது? இந்த வலைக்குள் சிக்காமல் வாழ்வடையமுடியுமா? அறிந்தோ அறியாமலோ இப்படிபட்ட பிரச்சனைக் குள் சிக்கியிருந்தால் எப்படி வெளியேறலாம்?

இவைகளை முன்கூட்டியே உனக்கு அறிந்து கொள்ள ஒரு வழி உண்டு. பிழையான வழிக்கு உன்னை எடுத்துச் செல்லும் கூட்டுறவுகளை இனம் காண அல்லது வாழ்கையை கெடுக்கும் சம்பந்தங்களை தவிர்த்துக் கொள்ள ஒரே தேவனிடம் வழி உண்டு;. அவர் சத்தத்தை கேட்டு அதன்படி செய்கின்றவன், கன்மலையின் மேல் தன் வீட்டை கட்டியவனுக்கு ஒப்பாவான். எந்தப் புயலும் அந்த இல்லத்தை உடைக்க முடியாது.  ஆம்! இயேசு அதை இலவசமாக தர இன்று உன்னை அழைக்கின்றார். 

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள:; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28) என்று இயேசு இன்று உன்னை அழைக்கின்றார். அவருக்குள் நீ உளவழுத்தம் இல்லாத நிம்மதியான வாழ்வை கண்டடைய முடியும். 

உலகத்தில் உபத்திரங்கள் உண்டு ஆனால் அவை யாவையும் ஜெயங்கொண்ட இயேசு இவைகளை மேற்கொள்ள எங்களுக்கும் வழி வைத்துள்ளார். எம் நிலை எப்படியாக இருந்தாலும் என்ன, எல்லாம் எம் கையில் தான் இருக்கின்றது. இயேசு இலவசமாக நிம்மதி தர காத்திருக்கிறார், நீ உன்னை ஒப்புக் கொடுக்க ஆயத்தமா? 

உளவழுத்தம் இல்லாத வாழ்கையை குறித்து வேதாகமத்திலே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முற்றிலும் சமாதானமான வாழ்வு தேவனிடம் உண்டு.

“கர்த்தருக்கு பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல இருப்பார்கள். இதோ, கர்த்தருக்கு பயப்படுகின்ற மனு~ன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கபடுவான்” சங்கீதம் (128:1-4)

இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற உனக்கு சமாதானம் தேவையா? அது உன் கையில் தான் இருகின்றது. மத வைராக்கியங்கள், குடும்ப அந்தஸ்துக்கள், சமுதாய நற்பெயர், கல்வி அறிவு, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணங்களும் உன்னை தடைசெய்யலாம். உனக்கு சமாதானம் தேவையா? முடிவெடுக்க வேண்டியது நீ தான்! இப்படியான சந்தர்ப்பம் இனி உனக்கு வராமல் போகலாம். இன்று உன் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்புக்கொடு.  
Saturday, February 6, 2016

Wednesday, February 3, 2016

Tuesday, February 2, 2016

உள்ளான மனிதன் மாசி மாத வெளியீடு - THE INNER MAN FEB 2016 ISSUE

2016 மாசி மாத வெளியீடு 

உள்ளடக்கம் 

இயேசு மனதுருக்கம் உள்ளவர் ………….....02
பிரசங்கக் குறிப்புகள் ……………..................... 04
அந்நிய தேசம் ………………....……….................08
கைக்கெட்டிய பழங்கள் ………..…..…..…......12

Thursday, January 28, 2016

கொஞ்சம் இருந்தால் என்ன?

கொஞ்சம் இருந்தால் என்ன?

கான்சர் (Cancer) என்னும் சொல்லை கேட்டவுடன், பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் போல இருகின்றதல்லவா?

மனித உடலானது பதினாயிரம் கோடிக்கணக்கான கலங்களை (Cells) கொண்டது. சாதாரணமாக, மனித கலங்கள் விருத்தியடைந்து, பிரிந்து உடலுக்கு தேவையான புதிய கலங்களை அமைக்கும். கலங்கள் பழமையடையும் போது அல்லது பாதிக்கப்படும்போது, அவை இறந்து, புதிய கலங்கள் அவ்விடத்தை நிரப்பும்.

புற்றுநோய் விருத்தியடையும்போது, இந்த ஒழுங்கு முறைக்கு எதிராக கலங்கள் செயற்படும். கலங்கள் அதிகதிகமாக வழமைக்கு மாறாக மாற்றமடைந்து, பழமையான அல்லது பாதிக்கப்;பட்ட கலங்கள் இறந்து போகாமலும், புதிய கலங்கள் தேவைப்படாத இடத்தில் புதிய கலங்கள் உற்பத்தியாகும் போது - இந்த மேலதிகமான கலங்கள் ஒழுங்கமை ப்பை மீறி தொடர்ந்து வளர்ந்து புற்று நோய் கட்டிகளை (Tumor) உரு வாக்கின்றது. (ஆதாரம் National Cancer Institue)

காலப்போக்கில் இவைகளை நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலமா கவும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகின்றது. இப்படியாக கட்டு மீறிய பல காரியங்கள் எங்கள் வாழ்க்கையிலும் உண்டு.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் வாக்களித்த செழுமை நிறைந்த தேசத்தைக் கொடுக்கும் போது, எதிரிகளை முற்றாக நீக்கிவிடும்படி யாக கட்டளையிட்டார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, தேவனுடைய கட்டளையை மீறி, அவர்களில் சிலரை தங்கள் வேலை களை பார்ப்பதற்காக அவர்களை விட்டு வைத்தார்கள். இதனால் அந்த விட்டு வைத்த எதிரிகள் காலப்போக்கில் பலமடைந்து கட்டுப்பாடின்றி இவர்களுக்கு கண்ணியாக மாறிப்போனார்கள்.

இப்படியாக நாங்களும் இயேசுக் கிறிஸ்துவை எங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பி, ஞானஸ்நானத்தை பெற்று மறுபடி பிறந்த வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது, எங்கள் பழைய சுபாவங் களை களைந்து “முற்றிலும் களைந்து” கிறிஸ்துவிற்குள் புது சிருஷ் டியாக வாழ வேண்டும். ஆனாலும், ஆங்காங்கே பழைய மனிதனுக்கு ரிய சில சுபாவங்களை பலர் விட்டு வைக்கின்றார்கள். ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருந்துவிட்டு போனால் என்ன? என்று பாராமுகமாக இருந்து விடுகின்றோம். அவை ஆரம்பத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருப்ப தைப்போன்றுதான் தென்படும், ஆனால் குறித்த நேரம் வரும்போது, அந்த சுபாவம் கட்டுமீறி வெளிப்பட்டு விபரீதங்களை கொண்டுவந்து விடும்.

உதாரணமாக சிலர் தாகாத வார்த்தைகளை பேசும் பழக்கத்தை முற்றாக விட்டு விடுவதில்லை. ஆனால் சந்தர்ப்பத்திற்கேற்ற பிரகாரம், ஆலயங்களில் நல்ல வார்த்தைகளையும், நண்பர்கள் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் இடைக்கிடையே சுற்றுவட்டாரங்களில் உள்ளவர் களைப்போல் ஊரோடு ஒத்தோடு என்று தகாத வார்த்தைகளை பேசிக் கொள்வார்கள். நாளடைவில் இந்த தகாத பழக்கம் புற்றுநோயைப் போல உள்ளே வளர ஆரம்பித்து, ஆலயத்தில் ஏற்படும் சில கருத்து வேறுபாடுகளுக்கு முகங்கொடுக்கும் போது, அந்த தகாத வார்த்தைகள் கட்டுமீறி இடந்தெரியாமல் வெளியே வந்து விடும். எந்த ஒரு பாவ பழக்கமும் இப்படியாகத்தான் தலை தூக்குகின்றது.

சமைக்காத மாமிச துணிக்கை வீட்டில் ஒரு இடத்தில் விழுந்திருக்கு மானால் அது புழுப்பிடிப்பதற்கு ஒருவரும் ஏதும் செய்யவேண்டிய தில்லை. அது போல துன்மார்க்கத்திற்கேதுவான பாவ பழக்கங்களை எங்களுக்குள்ளோ அல்லது வீட்டிலோ வைத்திருந்தால், பிசாசு உள்ளே வர நாங்கள் விசேஷித்த அழைப்பிதழ் கொடுக்கவேண்டியதில்லை. தனக்குச் சொந்தமான காரியங்கள் இருக்கும் இடத்தில் பிசாசிற்கு பங்குண்டு. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக் குமென்று அறியீர்களா? (1 கொரி 5:6)  நாங்கள் விட்டுவைத்திருக்கும் சிறிய தீய பழக்கங்கள் காலப்போக்கில் எங்கள் வாழ்க்கையை முற்றிலும் கெடுத்துவிடும்.

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுக்கிறிஸ்துவை அறிகிற அறிவி னாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னி லைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். (2 பேதுரு 2:20)

நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது எனறு சொல்லப்பட்ட மெய்யான பழமொழி யின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது. (2 பேதுரு 2:22)

எங்கள் வாழ்க்கையை கெடுக்கும் பொய், பெருமை, விபசாரம், வேசித் தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள் களியாட்டுக்கள் முதலானவைகளில் கொஞ்சம் வைத்திருக் கலாம் என சொல்லலாமா? கூடாதே! இவைகள் யாவும் புற்றுநோயை ப்போல பரவி வாழ்க்கையிலே வேண்டப்படாத வேதனைகளை, ஏன் மரணத்தை கூட உண்டு பண்ணும். ஆனால் இவைகளை எங்கள் சொந்த பலத்தால் ஜெயம் கொள்ள முடியாது. நாங்கள் எங்கள் வாழ்க்கையிலே இவைகளை விட்டுவிட உண்மையான தீர்மானம் செய்யும் போது பரிசுத்த ஆவியானவர் எங்களை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு வழிநடத்துவார்.

வேதம் சொல்கின்றது ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள் அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். பரிசுத்த வாழ்க்கையின் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொ றுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் எங்க ளில் உருவாக வேண்டும். இது ஒரு கணப்பொழுதில் உருவாகப் போவதில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். அதாவது எங்களுக்கு நேரிடும் அநீதியான சூழ்நிலைகளிலும் ஆவிக்குரிய கனியின் சுபாவம் வெளிப்பட வேண்டும். நாங்கள் ஆவியினால் பிழைத்திருந்தால் ஆவிகேற்றபடி நடக்கவும் கடவோம்.

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குளிருந்தால் புதுசிருஷ்டியாயிரு க்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின. பழைய வாழ்க்கைக்குரிய சுபாவங்களை கொஞ்சமும் வைத்திருக்காமல், அவைகளை உண்டாக்கும் சூழ்நிலைகளை முற்றிலும் தவிர்த்து, எங்கள் பரிசுத்த வாழ்க்கையை பாழாக்கும் செய்கைகளை முற்றிலும் எங்களை விட்டு அகற்றிவிடுவோம்.உள்ளான மனிதன் சஞ்சிகை 
THE INNER MAN BOOK
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH