கொஞ்சம் இருந்தால் என்ன?
கான்சர் (Cancer) என்னும் சொல்லை கேட்டவுடன், பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் போல இருகின்றதல்லவா?
மனித உடலானது பதினாயிரம் கோடிக்கணக்கான கலங்களை (Cells) கொண்டது. சாதாரணமாக, மனித கலங்கள் விருத்தியடைந்து, பிரிந்து உடலுக்கு தேவையான புதிய கலங்களை அமைக்கும். கலங்கள் பழமையடையும் போது அல்லது பாதிக்கப்படும்போது, அவை இறந்து, புதிய கலங்கள் அவ்விடத்தை நிரப்பும்.
புற்றுநோய் விருத்தியடையும்போது, இந்த ஒழுங்கு முறைக்கு எதிராக கலங்கள் செயற்படும். கலங்கள் அதிகதிகமாக வழமைக்கு மாறாக மாற்றமடைந்து, பழமையான அல்லது பாதிக்கப்;பட்ட கலங்கள் இறந்து போகாமலும், புதிய கலங்கள் தேவைப்படாத இடத்தில் புதிய கலங்கள் உற்பத்தியாகும் போது - இந்த மேலதிகமான கலங்கள் ஒழுங்கமை ப்பை மீறி தொடர்ந்து வளர்ந்து புற்று நோய் கட்டிகளை (Tumor) உரு வாக்கின்றது. (ஆதாரம் National Cancer Institue)
காலப்போக்கில் இவைகளை நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலமா கவும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகின்றது. இப்படியாக கட்டு மீறிய பல காரியங்கள் எங்கள் வாழ்க்கையிலும் உண்டு.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் வாக்களித்த செழுமை நிறைந்த தேசத்தைக் கொடுக்கும் போது, எதிரிகளை முற்றாக நீக்கிவிடும்படி யாக கட்டளையிட்டார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, தேவனுடைய கட்டளையை மீறி, அவர்களில் சிலரை தங்கள் வேலை களை பார்ப்பதற்காக அவர்களை விட்டு வைத்தார்கள். இதனால் அந்த விட்டு வைத்த எதிரிகள் காலப்போக்கில் பலமடைந்து கட்டுப்பாடின்றி இவர்களுக்கு கண்ணியாக மாறிப்போனார்கள்.
இப்படியாக நாங்களும் இயேசுக் கிறிஸ்துவை எங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பி, ஞானஸ்நானத்தை பெற்று மறுபடி பிறந்த வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது, எங்கள் பழைய சுபாவங் களை களைந்து “முற்றிலும் களைந்து” கிறிஸ்துவிற்குள் புது சிருஷ் டியாக வாழ வேண்டும். ஆனாலும், ஆங்காங்கே பழைய மனிதனுக்கு ரிய சில சுபாவங்களை பலர் விட்டு வைக்கின்றார்கள். ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருந்துவிட்டு போனால் என்ன? என்று பாராமுகமாக இருந்து விடுகின்றோம். அவை ஆரம்பத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருப்ப தைப்போன்றுதான் தென்படும், ஆனால் குறித்த நேரம் வரும்போது, அந்த சுபாவம் கட்டுமீறி வெளிப்பட்டு விபரீதங்களை கொண்டுவந்து விடும்.
உதாரணமாக சிலர் தாகாத வார்த்தைகளை பேசும் பழக்கத்தை முற்றாக விட்டு விடுவதில்லை. ஆனால் சந்தர்ப்பத்திற்கேற்ற பிரகாரம், ஆலயங்களில் நல்ல வார்த்தைகளையும், நண்பர்கள் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் இடைக்கிடையே சுற்றுவட்டாரங்களில் உள்ளவர் களைப்போல் ஊரோடு ஒத்தோடு என்று தகாத வார்த்தைகளை பேசிக் கொள்வார்கள். நாளடைவில் இந்த தகாத பழக்கம் புற்றுநோயைப் போல உள்ளே வளர ஆரம்பித்து, ஆலயத்தில் ஏற்படும் சில கருத்து வேறுபாடுகளுக்கு முகங்கொடுக்கும் போது, அந்த தகாத வார்த்தைகள் கட்டுமீறி இடந்தெரியாமல் வெளியே வந்து விடும். எந்த ஒரு பாவ பழக்கமும் இப்படியாகத்தான் தலை தூக்குகின்றது.
சமைக்காத மாமிச துணிக்கை வீட்டில் ஒரு இடத்தில் விழுந்திருக்கு மானால் அது புழுப்பிடிப்பதற்கு ஒருவரும் ஏதும் செய்யவேண்டிய தில்லை. அது போல துன்மார்க்கத்திற்கேதுவான பாவ பழக்கங்களை எங்களுக்குள்ளோ அல்லது வீட்டிலோ வைத்திருந்தால், பிசாசு உள்ளே வர நாங்கள் விசேஷித்த அழைப்பிதழ் கொடுக்கவேண்டியதில்லை. தனக்குச் சொந்தமான காரியங்கள் இருக்கும் இடத்தில் பிசாசிற்கு பங்குண்டு. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக் குமென்று அறியீர்களா? (1 கொரி 5:6) நாங்கள் விட்டுவைத்திருக்கும் சிறிய தீய பழக்கங்கள் காலப்போக்கில் எங்கள் வாழ்க்கையை முற்றிலும் கெடுத்துவிடும்.
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுக்கிறிஸ்துவை அறிகிற அறிவி னாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னி லைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். (2 பேதுரு 2:20)
நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது எனறு சொல்லப்பட்ட மெய்யான பழமொழி யின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது. (2 பேதுரு 2:22)
எங்கள் வாழ்க்கையை கெடுக்கும் பொய், பெருமை, விபசாரம், வேசித் தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள் களியாட்டுக்கள் முதலானவைகளில் கொஞ்சம் வைத்திருக் கலாம் என சொல்லலாமா? கூடாதே! இவைகள் யாவும் புற்றுநோயை ப்போல பரவி வாழ்க்கையிலே வேண்டப்படாத வேதனைகளை, ஏன் மரணத்தை கூட உண்டு பண்ணும். ஆனால் இவைகளை எங்கள் சொந்த பலத்தால் ஜெயம் கொள்ள முடியாது. நாங்கள் எங்கள் வாழ்க்கையிலே இவைகளை விட்டுவிட உண்மையான தீர்மானம் செய்யும் போது பரிசுத்த ஆவியானவர் எங்களை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு வழிநடத்துவார்.
வேதம் சொல்கின்றது ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள் அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். பரிசுத்த வாழ்க்கையின் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொ றுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் எங்க ளில் உருவாக வேண்டும். இது ஒரு கணப்பொழுதில் உருவாகப் போவதில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். அதாவது எங்களுக்கு நேரிடும் அநீதியான சூழ்நிலைகளிலும் ஆவிக்குரிய கனியின் சுபாவம் வெளிப்பட வேண்டும். நாங்கள் ஆவியினால் பிழைத்திருந்தால் ஆவிகேற்றபடி நடக்கவும் கடவோம்.
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குளிருந்தால் புதுசிருஷ்டியாயிரு க்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின. பழைய வாழ்க்கைக்குரிய சுபாவங்களை கொஞ்சமும் வைத்திருக்காமல், அவைகளை உண்டாக்கும் சூழ்நிலைகளை முற்றிலும் தவிர்த்து, எங்கள் பரிசுத்த வாழ்க்கையை பாழாக்கும் செய்கைகளை முற்றிலும் எங்களை விட்டு அகற்றிவிடுவோம்.

உள்ளான மனிதன் சஞ்சிகை
THE INNER MAN BOOK
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH